×

பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம்

 

பட்டிவீரன்பட்டி, மே 17: பெரும்பாறை பகுதி மலைக்கிராமங்களில் அதிக தொலை தொடர்பு வசதி இல்லாமல் இருந்ததால் பிஎஸ்என்எல் செல்போன் டவர் அமைக்க பலமுறை கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்று புல்லாவெளி, வெள்ளரிக்கரை, குப்பமாள்பட்டி, கவிக்காடு, கரடிபாறை பகுதிகளில் 5 பிஎஸ்என்எல் டவர் அமைக்கும் பணி நடந்து முடிவடைந்தது.

இந்நிலையில் புல்லாவெளி, வெள்ளரிக்கரை ஆகிய 2 பிஎஸ்என்எல் டவரில் நேற்று சோதனை ஓட்டம் நடந்தது. மற்ற 3 டவர்களில் சில நாட்களில் சோதனை ஓட்டம் விடப்படும். பின்னர் அடுத்த வாரத்தில் 5 பிஎஸ்என்எல் டவர்களும் திறக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

The post பிஎஸ்என்எல் டவர்களில் சோதனை ஓட்டம் appeared first on Dinakaran.

Tags : BSNL ,Pattiveeranpatti ,Pullaveli ,Vellarikarai ,Kuppamalpatti ,Kavikkadu ,Karadiparai ,Dinakaran ,
× RELATED காதலித்து கர்ப்பமாக்கி கைவிட்ட...