×

கலைவாணி மெட்ரிக் பள்ளி பிளஸ்1 தேர்வில் 100% தேர்ச்சி

திருவேங்கடம், மே 17: திருவேங்கடம்  கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பிளஸ் வகுப்பு தேர்வு எழுதிய 232 மாணவர்களும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 550 மதிப்பெண்களுக்கு மேல் 23 பேரும், 500க்கு மேல் 67 பேரும், 450க்கு மேல் 120 பேர் பெற்றுள்ளனர். 221 மாணவர்கள் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவர் சிவகணேசன் தமிழ் 96, ஆங்கிலம் 95, கணிதம் 99, இயற்பியல் 100, வேதியியல் 99, உயிரியல் 99 என மொத்தம் 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி சஹானா 600க்கு 580 மதிப்பெண்களும், மாணவர் விஸ்வநாதன், மாணவி தர்ஷினி ஆகியோர் 600க்கு 579 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தமிழ் பாடப்பிரிவில் 99 மதிப்பெண்கள் 2 பேர், ஆங்கிலம் 98 மதிப்பெண் ஒருவர், கணிதம் 100 மதிப்பெண் ஒருவர், இயற்பியல் 100 மதிப்பெண்கள் 6 பேர், வேதியியல் 100 மதிப்பெண் ஒருவர், கணினி அறிவியல் 100 மதிப்பெண்கள் 4 பேர், உயிரியல் 99 மதிப்பெண்கள் 2 பேர் பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி முதல்வர் பொன்னழகன் மற்றும் ஆசிரியர்கள் வெகுவாக பாராட்டினர்.

The post கலைவாணி மெட்ரிக் பள்ளி பிளஸ்1 தேர்வில் 100% தேர்ச்சி appeared first on Dinakaran.

Tags : Thiruvengadam ,Thiruvengadam Kalaivani ,Dinakaran ,
× RELATED திருவேங்கடத்தில் கோடை மழை பொதுமக்கள் மகிழ்ச்சி