×

பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ நிகழ்ச்சி

நாகர்கோவில், மே 17: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் பிளஸ் 2 மாணவர்களுக்கு உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடந்தது. கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணாக்கர்களுக்கான ‘என் கல்லூரி கனவு’ என்ற உயர்கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சியானது தன்னார்வ இயக்கத்தின் துணையுடன் தக்கலை அரசு மேல்நிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் ஏராளமான மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பால தண்டாயுதபாணி, பத்மனாபபுரம் ஆர்.டி.ஒ தமிழரசி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் கனகராஜ், தாட்கோ மாவட்ட மேலாளர் தெய்வகுருவம்மாள், முன்னோடி வங்கி மேலாளர் கே.எல்.பிரவீன்குமார், பள்ளி தலைமையாசிரியர்கள் மற்றும் விடுதி காப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

The post பிளஸ் 2 மாணவர்களுக்கு ‘என் கல்லூரி கனவு’ நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Adi Dravidar ,Tribal Welfare Department ,Takkala Government Higher Secondary School ,Kanyakumari District ,Adi Dravida and Tribal Welfare Department ,Dinakaran ,