×

முன்னாள் உதவி ஆணையரை தாக்கிய தந்தை, மகன் கைது

வேளச்சேரி: ரியல் எஸ்டேட் தொழிலில் ஏற்பட்ட முன்விரோதத்தில் முன்னாள் காவல் உதவி ஆணையரை தாக்கிய தந்தை, மகனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். வேளச்சேரி உதயம் நகர் அமிர்தம் அவென்யூவை சேர்ந்தவர் ராஜேந்திர குமார் (65). இவர் தமிழ்நாடு காவல்துறையில் சிசிபி பிரிவில் காவல் உதவி ஆணையராக பணியாற்றி, கடந்த 2019 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். தற்போது ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார்.

இவரிடம் திருவான்மியூர் ராமகிருஷ்ணநகர் சாந்தி அவென்யூவைச் சேர்ந்த ராஜா (55) என்பவர் உதவியாளராக வேலை செய்து வருகிறார்.  இந்நிலையில், உதவியாளர் ராஜாவின் மகன் ஈஸ்வர் நேற்று முன்தினம் ராஜேந்தரகுமாரின் வீட்டிற்கு சென்று அவரை அவதூறாக பேசி கத்தியால் தாக்கினார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ராஜேந்திரகுமார் அலறிக்கூச்சலிட்டார். சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதைக் கண்ட ஈஸ்வர் தப்பிச்சென்றார்.

கத்தியால் தாக்கப்பட்ட ராஜேந்திரகுமார் சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதுதொடர்பாக வேளச்சேரி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில், ராஜா மற்றும் அவரது மனைவி கிருஷ்ணவேணி ஆகியோர் துாண்டுதலின்பேரில் ஈஸ்வர், ராஜேந்திரகுமாரை தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ராஜா மற்றும் ஈஸ்வர் (22) ஆகியோரை நேற்று கைது செய்தனர். மேலும், தலைமறைவாக உள்ள கிருஷ்ணவேணியை தேடி வருகின்றனர்.

The post முன்னாள் உதவி ஆணையரை தாக்கிய தந்தை, மகன் கைது appeared first on Dinakaran.

Tags : Velachery ,Rajendra Kumar ,Amritham Avenue, Udayam Nagar, Velachery ,Tamil Nadu Police ,
× RELATED சென்னையில் ஓய்வு பெற்ற காவல் உதவி ஆணையரை கொல்ல முயற்சி!!