×

குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் நீக்க முடியாது: பிரதமர் மோடி திட்டவட்டம்

அசாம்கர்: குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் நீக்க முடியாது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். உத்தரப்பிரதேச மாநிலம், லால்கஞ்ச், அசாம்கர் உட்பட பல்வேறு இடங்களில் நடந்த தேர்தல் பிரசார கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ‘‘குடியுரிமை திருத்த சட்டத்தின் கீழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்கும் பணி ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவர்கள் நாட்டில் நீண்ட காலமாக அகதிகளாக வாழ்பவர்கள் மற்றும் மதத்தின் அடிப்படையில் நாட்டை பிரிக்கும்போது பாதிக்கப்பட்டவர்கள். இந்த அகதிகளை காங்கிரஸ் புறக்கணிக்கிறது.

காங்கிரஸ், சமாஜ்வாடி கட்சிகள் குடியுரிமை திருத்த சட்டம் என்ற பெயரில் பொய்களை பரப்ப முயற்சிக்கின்றன. உத்தரப்பிரதேசம் மற்றும் நாடு முழுவதையும் கலவரத்தை நோக்கி தள்ளுவதற்கு அவர்கள் முயற்சிக்கின்றனர். இந்தியா கூட்டணி குடியுரிமை திருத்த சட்டத்தை அகற்றுவதாக கூறுகிறார்கள். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உங்களால் ஒருபோதும் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்க முடியாது. நீங்கள் ஒரு ஏமாற்றுகாரர்.நாட்டை வகுப்புவாத தீயில் எரிய செய்தீர்கள்” என்றார்.

இதேபோல் ஜான்பூரில் பேசிய பிரதமர் மோடி, ‘‘இந்த மக்களவை தேர்தல் நாட்டின் பிரதமரை தேர்வு செய்வதற்கான ஒரு வாய்ப்பாகும். உலகில் யாராலும் ஆதிக்கம் செலுத்த முடியாத ஆனால் இந்தியாவின் பலத்தை உலகுக்கு உணர்த்தும் வலுவான அரசை நடத்தும் பிரதமரை தேர்ந்தெடுக்க வேண்டும். உங்கள் ஓட்டுக்கள் வலுவான அரசை உருவாக்கும். உங்கள் ஓட்டுக்கள் நேரடியாக மோடியின் கணக்கில் சேரும்” என்றார்.

The post குடியுரிமை திருத்த சட்டத்தை யாராலும் நீக்க முடியாது: பிரதமர் மோடி திட்டவட்டம் appeared first on Dinakaran.

Tags : PM Modi ,Modi ,Uttar Pradesh ,Lalganj ,Azamgarh ,Dinakaran ,
× RELATED இந்துக்களை இரண்டாம் தர...