×

செங்கல்பட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் உள்ள அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் ஆய்வு மேற்கொண்டார். செங்கல்பட்டு மாவட்ட அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் இந்த ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அருண்ராஜ் நேற்று அரசு தொழிற்பயிற்சி மையத்தில் ஆய்வு செய்தார். அப்போது, தொழிற்பயிற்சிக்கான மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை கேட்டறிந்தார். அதனைத்தொடர்ந்து, 4.0 தொழிற் பிரிவுகள் நடைபெறும் பணிமனைகளுக்கு சென்று பார்வையிட்டார். அப்போது, தொழிற்சாலை 4.0 தொழிற்பிரிவுகள் திட்டத்தின் கீழ் பயிற்சியாளர்களை சேர்த்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தார். மேலும், தொழில் பயிற்சி நிலையத்தில் 100 சதவீதம் மாணவர் சேர்க்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, தொழிற்பயிற்சி நிலையம் சிறந்த முறையில் இயங்குவதாக பாராட்டினார். இந்த ஆய்வில் அரசினர் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஹேமநாதன் மற்றும் அரசு அலுவலர்கள் உடன் இருந்தனர்.

The post செங்கல்பட்டில் அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Government Vocational Training Center ,Chengalpattu ,District ,Arunraj ,Chengalpattu District Government Vocational Training Center ,Collector ,Chengalpattu Government Vocational Training Center ,Dinakaran ,
× RELATED செங்கல்பட்டு மாவட்ட கூட்டுறவு கடன் சங்கத்தின் லாப தொகை அளிப்பு