×

அசாமில் தொப்பை போலீஸ் பரிசோதனை: ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம்

கவுகாத்தி: அசாம் மாநில காவல்துறையினருக்கான உடல் பருமன்(பிஎம்ஐ) சோதனை ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்க உள்ளது.  அசாம் மாநிலத்தில் காவல்துறையில் பணியாற்றும் அதிகாரிகள் தங்கள் உடலை உறுதியுடன் வைத்திருப்பதை உறுதி செய்யவும், உயரம் மற்றும் எடைக்கு ஏற்ப உடல் பருமன் உள்ளதா என்பதை அளவிடவும் உடல்நிறை குறியீட்டெண் சோதனை(பிஎம்ஐ) சோதனை நடத்தப்படுகிறது.

இதில் 25க்கு மேற்பட்ட பிஎம்ஐ உடையவர்கள் அதிக எடை உடையவர்களாகவும், 30க்கு மேற்பட்ட பிஎம்ஐ கொண்டவர்கள் உடல் பருமன் கொண்டவர்களாகவும் கருதப்படுகின்றனர். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15ம் தேதி உடல் குறியீட்டெண் சோதனை நடத்தப்பட்டது. இதில் தைராய்டு போன்ற உடல்நல குறைபாடுகள் உள்ளவர்களை தவிர, தொப்பை வைத்துள்ள அல்லது அதிக எடையுள்ள காவல்துறையினர் தாங்களாகவே பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற அறிவுறுத்தப்பட்டனர்.

அதன்படி கடந்த ஆண்டு இந்த சோதனையில் 70,161 ேபர் பங்கேற்றனர். அவர்களில் 1,748 பேர்(97.53% பேர்) உடல்நிறை குறியீட்டெண் 30ஐ தாண்டியதால் தோல்வி அடைந்தனர். இதைத்தொடர்ந்து உடல் பருமனானவர்கள் என வகைப்படுத்தப்பட்ட 1,884 காவலர்களுக்கு கடந்த ஜனவரி 24ம் தேதி 2ம் சுற்று சோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் நடப்பு ஆண்டுக்கான பிஎம்ஐ சோதனை ஆகஸ்ட் 16ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

The post அசாமில் தொப்பை போலீஸ் பரிசோதனை: ஆகஸ்ட் 16ம் தேதி தொடக்கம் appeared first on Dinakaran.

Tags : Assam ,Guwahati ,
× RELATED பெற்றோருடன் மகிழ்ச்சியாக இருக்க 2 நாள்...