×

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி கைது

திருவள்ளூர்: நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்து வந்த வாலிபரிடம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த வெள்ளவேடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் சரவணன்(32). இவர் மீது கஞ்சா விற்பனை வழக்கு நிலுவையில் உள்ளது. நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த சரவணனை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்நிலையில், வெள்ளவேடு அடுத்த கூடப்பாக்கத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக சப் – இன்ஸ்பெக்டர் எஸ்.ரஞ்சித் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன்படி குச்சிக்காடு என்ற பகுதிக்கு சென்றனர். அங்கு சந்தேகப்படும்படி இருந்த வாலிபர் ஒருவரை பிடித்து விசாரணை செய்ததில், கூடப்பாக்கம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த மணி மகன் சரவணன்(32) என தெரியவந்தது. அவனிடமிருந்து 60 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து விசாரணை நடத்தினர். ஏற்கெனவே கஞ்சா விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவாக இருந்தது தெரியவந்தது. எனவே தேடப்படும் குற்றவாளியாக இருந்த சரவணனை கைது செய்த போலீசார் அவனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட தலைமறைவு குற்றவாளி கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Saravanan ,Vellavedu ,station ,Poontamalli ,Tiruvallur district ,Absconder ,
× RELATED சோழவரம் அருகே மின்சாரம் பாய்ந்து லாரியில் தீ: ஓட்டுநர் பலி