×

ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியரின் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த மங்காவரம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஓய்வு பெற்ற தபால் துறை ஊழியர் ஜெயபாலன்(67). இவர் வங்கி ஒன்றில் நேற்று ரூ.2 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு தனது ஸ்கூட்டியின் இருக்கைக்கு கீழ் வைத்து பூட்டி விட்டு கும்மிடிப்பூண்டி பஜாரில் உள்ள ஒரு மருந்து கடைக்கு சென்றுள்ளார்.மீண்டும் வண்டியை எடுப்பதற்காக வந்தவர் அதிர்ச்சி அடைந்தார். இதில் இருசக்கர வாகனத்தின் டிக்கியில் இருந்த ரூ.2 லட்சம் மாயமானது தெரிய வந்தது. இதனை அடுத்து எங்கு தேடியும் கிடைக்காததால் கும்மிடிப்பூண்டி காவல் நிலையித்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில், போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர்.

அப்போது, மருந்துகடை வாசலில் சாவியுடன் ஸ்கூட்டியை நிறுத்திய ஜெயபாலனின் அருகே மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஹெல்மெட் அணிந்த மர்ம ஆசாமி ஒருவர் அருகே உள்ள கடையில் சென்று முகவரியை கேட்டுள்ளார்.
அப்போது, மற்றொரு ஹெல்மெட் அணிந்த நபர் ஜெயபாலனின் ஸ்கூட்டியில் இருந்த சாவியை எடுத்து வாகனத்தின் டிக்கியில் இருந்த ரூ.2 லட்சத்தை திருடி கொண்டு அங்கிருந்து தப்பித்து சென்றது தெரிய வந்தது. எனவே போலீசார் இது குறித்து வழக்கு பதிவு செய்து ஜெயபாலன் வங்கியில் இருந்து பணம் எடுப்பதை மர்ம நபர்கள் பின் தொடர்ந்து வந்து, தெரிந்து கொண்டு திட்டமிட்டு திருட்டை அரங்கேற்றி உள்ளது தெரிய வந்து. இதனை தொடர்ந்து, டிஎஸ்பி கிரியோசக்தி தலைமையில் தனிப்படை அமைத்து மர்ம நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post ஓய்வு பெற்ற அஞ்சல்துறை ஊழியரின் ஸ்கூட்டியில் வைத்திருந்த ரூ.2 லட்சம் திருட்டு appeared first on Dinakaran.

Tags : Kummidipoondi ,Jayapalan ,Mangavaram village ,
× RELATED இரண்டாம் கட்டமாக இலங்கை மறுவாழ்வு...