×

வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்பு

கொழும்பு: வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் விளையாட உள்ளது. அடுத்த மாதம் இலங்கை வரும் வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி முதலில் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் போட்டித் தொடரில் மோதுகிறது. இந்த 3 போட்டிகளும் காலே சர்வதேச மைதானத்தில் ஜூன் 15-21ல் நடைபெற உள்ளன.

அதைத் தொடர்ந்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சை நடத்தும். இந்த போட்டிகள் அம்பாந்தோட்டை மைதானத்தில் (ஜூன் 24-28) நடைபெறும் என இலங்கை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. இந்த டி20 தொடர், இலங்கையில் ஜூலை 20ம் தேதி தொடங்கி நடைபெற உள்ள மகளிர் ஆசிய கோப்பை டி20 தொடருக்கான பயிற்சியாக அமையும்.

 

The post வெஸ்ட் இண்டீஸ் மகளிர் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் ஒருநாள், டி20 தொடரில் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : West Indies Women's team ,Sri Lanka ,ODI ,T20 ,Colombo ,West Indies women's cricket team ,West Indies Women's ,Dinakaran ,
× RELATED சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு...