×

நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து அவதூறு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார்

சென்னை: காஞ்சிபுரத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் தன்னையும் மற்றும் தனது கணவரையும் இழிவாக பேசிய பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திரைப்பட நடிகை ராதிகாவின் மேலாளர் நடசேன் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை வேப்பேரியில் உள்ள போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் திரைப்பட நடிகை ராதிகா சார்பில் அவரது மேலாளர் நடேசன் நேற்று அளித்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

நடிகை ராதிகாவுக்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் நான் அவர் சார்பில் புகார் மனு தாக்கல் செய்கிறேன். ராதிகா, அவரது கணவர் சரத்குமார் முன்னாள் எம்எல்ஏ, முன்னாள் ராஜ்யசபா எம்பியாக இருந்தவர். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் விருதுநகர் தொகுதியில் பாஜ கட்சி வேட்பாளராக ராதிகா போட்டியிட்டார். அவரை ஆதரித்து அவரது கணவர் சரத்குமார் பிரசாரம் செய்து வந்தார்.

தேர்தல் நேரத்தில் கடந்த 15.4.2024 அன்று காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, தெருமுனை கூட்டத்தில் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, பொது வெளியில் ராதிகா மற்றும் அவரது கணவர் சரத்குமாரை இழிவாகவும், தரக்குறைவாகவும் பேசிய கானொளியை கண்டு மிகுந்த அதிர்ச்சியடைந்தேன். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது சுய விளம்பரத்திற்காக ராதிகா, சரத்குமாரை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். எனவே அவர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

The post நடிகை ராதிகா, சரத்குமார் குறித்து அவதூறு சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: கமிஷனர் அலுவலகத்தில் புகார் appeared first on Dinakaran.

Tags : Sivaji Krishnamurthy ,Radhika ,Sarathkumar ,CHENNAI ,Nadasen ,Kanchipuram ,Dinakaran ,
× RELATED திருச்சி அருகே அறுந்து கிடந்த...