×

கோவைக்கு ஆம்னி பஸ்சில் சென்ற சென்னை பெண் ஐடி ஊழியர் சாவு

கோவை: கோவை மதுக்கரை அடுத்த பாலத்துறையை சேர்ந்தவர் கார்மேகம். இவரது மகள் மகாலட்சுமி (23). சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். கடந்த சில நாட்களாக அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்ததாக தெரிகிறது. இதனையடுத்து மகாலட்சுமி சென்னையில் இருந்து தனியார் ஆம்னி பஸ் மூலம் கோவை புறப்பட்டு வந்தார். அந்த பஸ் நேற்று முன்தினம் காலை கோவை காந்திபுரம் பஸ் நிலையம் வந்தது. பஸ்சின் கீழ் பெர்த்தில் படுத்திருந்த மகாலட்சுமி எழுந்திருக்கவில்லை.

டிரைவர் மற்றும் கண்டக்டர் அவரிடம் காந்திபுரம் வந்துவிட்டது, எழுந்திருங்கள் என்று கூறியும் அசைவின்றி படுத்திருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர்கள் உடனே 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். ஆம்புலன்ஸ் ஊழியர்கள் வந்து மகாலட்சுமியை பரிசோதித்தபோது அவர் ஏற்கனவே இறந்திருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவலறிந்து காட்டூர் போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். விசாரணையில் அந்த பெண் காய்ச்சல், நெஞ்சுவலியால் இறந்தது தெரியவந்துள்ளது. ஓடும் ஆம்னி பஸ்சில் இளம்பெண் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினர் மத்தியில் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

The post கோவைக்கு ஆம்னி பஸ்சில் சென்ற சென்னை பெண் ஐடி ஊழியர் சாவு appeared first on Dinakaran.

Tags : Chennai ,omni bus ,Coimbatore ,Balathurai ,Madhukara, Coimbatore ,Mahalakshmi ,
× RELATED கிளாம்பாக்கம் ஆம்னி பேருந்து நிலையம்...