×

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு!

கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். 2.5 கிலோ கஞ்சா வைத்திருந்ததாக சவுக்கு சங்கர், அவரது உதவியாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. கஞ்சா வழக்கில் மே 22ம் தேதி வரை சவுக்கு சங்கரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் தாக்கல் செய்த மனு வரும் 20ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

 

The post கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் ஜாமீன் கோரி சவுக்கு சங்கர் மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் மனு! appeared first on Dinakaran.

Tags : Shankar ,Madurai district court ,Shankar Shankar ,Chavku Shankar ,Dinakaran ,
× RELATED சவுக்கு சங்கருக்கு ஒரு வழக்கில் இடைக்கால ஜாமீன்..!!