×

மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!

நெல்லை: கடலில் அதிகபட்சமாக மணிக்கு 55 கி.மீ வேகம் வரை காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனால், நெல்லை மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; இந்திய வானிலை ஆய்வு மையத்தின் எச்சரிக்கை செய்தியின்படி இன்று (16.05.2024) முதல் மன்னார் வளைகுடா மற்றும் கன்னியாகுமரி கடல் பகுதிகளில் காற்றானது மணிக்கு 40, 45 கி.மீ வரை அதிகபட்சமாக 55 கி.மீ வரை வீசக்கூடும் மற்றும் கன மழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.

எனவே, திருநெல்வேலி மாவட்ட மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குள் மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என தெரிவிக்கப்படுகிறது. மீனவர்களுக்கு இந்த வானிலை எச்சரிக்கையினை மீனவ கிராம ஆலயங்கள் வாயிலாக அறிவிப்பு செய்திடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

 

The post மீனவர்கள் இன்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்குச் செல்ல வேண்டாம்: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! appeared first on Dinakaran.

Tags : DISTRICT ,Rice ,Meteorological Survey Centre ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இன்று 15 மாவட்டங்களில்...