×

குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்புக்கு சன்ரைசர்ஸ் ஆயத்தம்: ஐதராபாத்தில் இன்று மோதல்

ஐதராபாத்: ஐபிஎல் டி20 தொடரின் 66வது லீக் போட்டியில் இன்று இரவு 7.30 மணிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் 12 போட்டிகளில் 7 வெற்றி, 5 தோல்வி என 14 புள்ளிகளுடன் 4வது இடத்தில் உள்ளதுடன் தொடர்ந்து பிளே ஆப் வாய்ப்பில் நீடிக்கிறது. இந்நிலையில் சன்ரைசர்ஸ் இன்று குஜராத்தையும், 19ம் தேதி பஞ்சாப்பையும் எதிர்கொள்கிறது. இந்த 2 போட்டிகளில் சன்ரைசர்ஸ் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய ஒரு வெற்றி போதும். எஞ்சியுள்ள 2 போட்டிகளையும் சன்ரைசர்ஸ் சொந்த மைதானத்தில் விளையாட உள்ளதால் கூடுதல் உற்சாகத்தில் களமிறங்கும். அபிஷேக் ஷர்மா, டிராவிஸ் ஹெட் ஆகியோரின் அதிரடி தொடக்கம் எதிரணி பவுலர்களை கிலி கொள்ள செய்கிறது.

இவர்களைத் தொடர்ந்து சமீர்ரெட்டி, ஹென்றி கிளாஸன், சமத், ஷாபாஸ், சன்விர், கேப்டன் கம்மின்ஸ் ஆகியோரும் அதிரடியாக ஆடுவதில் வல்லவர்கள்தான். புவனேஷ்வர் குமார், கம்மின்ஸ், ஷாபாஸ், உனத்கட் வேக கூட்டணியும், விஜயகாந்த் வியாஸ்காந்த் சுழலும் குஜராத் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கும். அதே நேரத்தில் குஜராத் 13 போட்டிகளில் 5 வெற்றி, 7 தோல்வி, ஒரு ரத்து என 11 புள்ளிகளுடன் 8வது இடத்தில் இருந்தாலும், மழை காரணமாகவே பிளே ஆப் வாய்ப்பை பறிகொடுக்க நேர்ந்தது. ஆனாலும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் ஆறுதல் வெற்றிக்காக மல்லுக்கட்டும் என்பதில் சந்தேகம் இல்லை. இதுபோல் சன்ரைசர்ஸ் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்ய வரிந்து கட்டும் என்பதால் இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

The post குஜராத்தை வீழ்த்தி பிளே ஆப் வாய்ப்புக்கு சன்ரைசர்ஸ் ஆயத்தம்: ஐதராபாத்தில் இன்று மோதல் appeared first on Dinakaran.

Tags : Sunrisers ,Gujarat ,Hyderabad ,IPL T20 ,Gujarat Titans ,Pat Cummins ,
× RELATED தீ விபத்து நடந்த பள்ளி மூடல் குஜராத் அரசு நடவடிக்கை