- பிரதமர் மோடி
- அரவிந்த் கெஜ்ரிவால்
- பாஜக
- தில்லி
- அரியானா
- லக்னோ
- சமாஜ்வாடி கட்சி
- அகிலேஷ் யாதவ்
- கெஜ்ரிவால்
டெல்லி, அரியானாவில் பாஜக படுதோல்வி அடையும் என அரவிந்த் கெஜ்ரிவால் கருத்து தெரிவித்துள்ளார். லக்னோவில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது பேசிய கெஜ்ரிவால்; டெல்லி, அரியானாவில் பாஜக படுதோல்வி அடையும். பெரும்பாலான மாநிலங்களில் பாஜக குறைந்த எண்ணிக்கையிலேயே வெற்றி பெறும். 220-க்கும் குறைவான தொகுதிகளையே பாஜக பெறும் என்பதே இன்றைய கள நிலவரம்.
உ.பி., மராட்டியம், மேற்குவங்கம், டெல்லி, பீகார், கர்நாடகாவில் பாஜக வெற்றி பெறும் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும். மக்களவை தேர்தலில் 400 தொகுதிகளுக்கு மேல் பாஜக வென்றால் இட ஒதுக்கீட்டை ஒழித்துவிடுவார்கள். இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் நரேந்திர மோடி விரும்புகிறார். அமித் ஷாவை பிரதமராக்கவே பிரதமர் மோடி வாக்கு கேற்கிறார். பாஜகவில் 75 வயதானவர்கள் கட்சி பதவியில் இருந்து ஓய்வு பெறுவர் என்ற விதியை மோடி பின்பற்றுவார் என நம்புகிறேன் இவ்வாறு கூறினார்.
ஆம் ஆத்மி கட்சி எம்.பி., சஞ்சய் சிங் கூறுகையில், “மணிப்பூரில் நடந்ததை பார்த்து, நாடு முழுவதும் வேதனை அடைந்தது. ஆனால், பிரதமர் மோடி, இந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தார். பிரஜ்வல் ரேவண்ணா, ஆயிரக்கணக்கான பெண்களை பலாத்காரம் செய்தார், ஆனால், பிரதமர் மோடி. ஜந்தர் மந்தரில் எங்கள் மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தியபோது, காவல்துறையினரால் தாக்கப்பட்டார், பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு வாக்கு கேட்கிறார். நான் குறிப்பிட்ட இந்த விவகாரங்களுக்கு எல்லாம் பாஜகவும், பிரதமர் மோடியும் பதில் சொல்ல வேண்டும். ஸ்வாதி மாலிவால் விவகாரத்தில் அரசியல் செய்யக் கூடாது” என்றார்.
அதனை தொடர்ந்து பேசிய அகிலேஷ் யாதவ்; மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு 143 இடங்கள்தான் கிடைக்கும் என்று கூறினார்.
The post இட ஒதுக்கீட்டை ஒழிக்கவே பிரதமர் மோடி விரும்புகிறார்: அரவிந்த் கெஜ்ரிவால் பரபரப்பு பேட்டி appeared first on Dinakaran.