×

இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிப்பு

நாகை: இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கனமழை அறிவிப்பு எதிரொலியாக நாகை இலங்கை இடையே கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

நாகை துறைமுகத்தில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து கடந்தாண்டு அக்டோபர் 14ம் தேதி துவங்கப்பட்டது. செரியபாணி என்று பெயரிடப்பட்ட இந்த கப்பலில் கட்டணமாக ரூ.6,500 நிர்ணயம் செய்யப்பட்டு 18 சதவீதம் ஜிஎஸ்டி வரியுடன் சேர்த்து ரூ.7,670 வசூலிக்கப்பட்டது.

இயற்கை சீற்றம் காரணமாக அக்டோபர் 20ம் தேதி முதல் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதையடுத்து மீண்டும் கப்பல் போக்குவரத்து துவங்கும் என்று அறிவிக்கப்பட்டதையடுத்து. இதற்காக பலர் டிக்கெட் முன்பதிவு செய்தனர். நாகையில் இருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு நாளை முதல் கப்பல் போக்குவரத்து தொடங்க இருந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மேலும் கப்பல் போக்குவரத்து தொடங்குவது மீண்டும் தாமதம் ஏற்பட்டதற்கு டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகளிடம் தனியார் நிறுவனம் வருத்தம் தெரிவித்தது. “தவிர்க்கமுடியாத சில சட்டரீதியான அனுமதிகள் காரணமாகவும், நாமதமான கப்பலின் வருகையினாலும் எமது திட்டமிட்ட நாகை காங்கோன் நாகை பயணிகள் கப்பல் சேவையினை இயக்கமுடியவில்லை.

சேவையினை ஞாயிற்றுக்கிழமை 19/05/2024 இல் இருந்து இயக்குவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர் இதுவரை பதிவு செய்த பயணிகளை 19/05/2024 சேவைக்கு கட்டனமின்றி மாற்றியுள்ளோம். பதிவு செய்த பயணிகள் 19/06/2024 அன்று அல்லது அதற்குப் பின்னர் அவர்கள் விரும்பிய திகதிகளில் பயணிக்கலாம்” என தெரிவித்துள்ளது.

The post இலங்கை – காங்கேசன்துறை இடையே மே 19-ம் தேதி கப்பல் போக்குவரத்து தொடங்கும் என அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Kangesanthurai ,Nagai ,Kangesanthurai, ,Dinakaran ,
× RELATED நாகை – இலங்கை இடையே மே 19-ல் கப்பல் போக்குவரத்து தொடக்கம்