கோவை: கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக பெய்த மழை காரணமாக சிறுவாணி அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. சிறுவாணி அணையின் நீர்மட்டம் 8.9 அடியில் இருந்து 10 அடியாக உயர்ந்துள்ளது. சிறுவாணி நீர்பிடிப்பு பகுதி, அடிவார பகுதிகளில் மழை பெய்து வருவதால் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. சிறுவாணி அணையின் நீர்பிடிப்பு பகுதியில் நேற்று 5.2 செ.மீ., அணையின் அடிவார பகுதியில் 3.4 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
The post கோவையில் சிறுவாணி அணையின் நீர்மட்டம் 10 அடியாக உயர்வு..!! appeared first on Dinakaran.