- வலார்பிரை
- அஷ்டமி
- பைரவர் ஜெயங்கொண்டம்
- கலாபிராவ்
- கலபைரவர்
- ஜெயங்கொண்டம் கோமலைநாத் கோயில்
- வலார்பிரை அஷ்டமி
- பைரவர்
ஜெயங்கொண்டம். மே 16: ஒவ்வொரு மாதமும் வளர்பிறையில் வரும் அஷ்டமி காலபைரவருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இதனை ஒட்டி ஜெயங்கொண்டம் கழுமலைநாதர் கோவிலில் உள்ள காலபைரவருக்கு சிறப்பு யாகமும் திரவிய பொடி மாவு பொடி மஞ்சள் சந்தனம் எலுமிச்சை சாறு உள்ளிட்ட 16 வகை பொருட்களால் ஆன சிறப்பு அபிஷேகமும் நடத்தப்பட்டது. யாகத்தில் மஞ்சள் குங்குமம் வெட்டிவேர் நன்னாரி வேர் கடுக்காய் வெண்கடுகு உள்ளிட்ட பல்வேறு வகையான மூலிகைகள் மா பலா வாழை, திராட்சை, மாதுளை, எலுமிச்சை உள்ளிட்ட பழங்கள் இடப்பட்டன. பின்னர் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. ஜெயங்கொண்டம் அருகிலுள்ள செங்குந்தபுரம் மாரியம்மன் கோவிலில் உள்ள கால பைரவருக்கு வளர்பிறை அஷ்டமி தினத்தை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. ஏராளமான மக்கள் கால பைரவரை வணங்கி தரிசித்துச் சென்றனர்.
The post வளர்பிறை அஷ்டமி பைரவருக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை appeared first on Dinakaran.