×

சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது

பெரம்பலூர், மே16: பெரம்பலூர் மாவட்டத்தில் 2023-2024ம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களு க்கு, சிறந்த தொழில் முனைவோர் விருது வழங்கப்படவுள்ளதால் விருப்ப முள்ள தொழில் நிறுவனங் கள் விண்ணப்பிக்கலாம்- பெரம்பலூர் மாவட்டக் கலெக்டர் கற்பகம் தகவல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:
தமிழ்நாடு அரசு 2023-2024ம் ஆண்டில் சிறப்பாக செயல் பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, சிறந்த தொழில் முனைவோர் உட்பட ஆறு பிரிவுகளில், தமிழக அரசு விருது வழங்க உள்ளது. தமிழகத்தில், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவில் 50 லட்சத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் செயல்படுகின்றன. அவற்றின் வாயிலாக ஒரு கோடிக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். உள்நாடு மற்றும் உலக சந்தைகளில் போட்டி தன்மையுடன் இருக்க, ஆக்கப்பூர்வமான மற்றும் புதுமையான நடவடிக்கைகள் வாயிலாக முன்னேற்றம் கண்டுள்ள தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை ஊக்குவிக்க தமிழக குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை விருதுகள் வழங்குகிறது.

அதன்படி, 2023-24ம் ஆண்டில் சிறப்பாக செயல் பட்ட தொழில் முனைவோர் களுக்கு, மாநில அளவிலான சிறந்த வேளாண் தொழில் முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த மகளிர் தொழில் முனைவோர் விருது, சிறப்பாக செயல்படும் நலிந்த மற்றும் ஒடுக்கப் பட்ட பிரிவைச் சேர்ந்த தொழில் முனைவோர் விருது, மாநில அளவில் சிறந்த தரம் மற்றும் ஏற்று மதிக்கான விருது, மாநில அளவில் சிறந்த தொழில் முனைவோருக்கான விருது, மாவட்ட அளவில் சிறந்த தொழில் முனை வோருக்கான விருது என மொத்தம் ஆறு பிரிவுகளில் வழங்கப்படஉள்ளது.

விருது பெறும் விரும்பும் தொழில் நிறுவனங்கள் பேம்.டி.என். (< https://awards.fametn.com/ >) என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கான இறுதி நாள் வருகிற 20ஆம் தேதிஆகும்.
மேலும் விவரங்களுக்கு, பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், பெரம்பலூர்-621212 என்பவரை நேரிலும், 89255 33976, 89255 33978 என்ற தொலைபேசியின் மூலமும் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கற்பகம் தெரிவித்துள்ளார்.

The post சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு சிறந்த தொழில் முனைவோர் விருது appeared first on Dinakaran.

Tags : Perambalur ,Perambalur district ,Karpakam ,Dinakaran ,
× RELATED பெரம்பலூரில் ஆசிரியை கொலை வழக்கு குற்றவாளிக்கு குண்டாஸ்