×

பரமக்குடி அருகே ஆரோக்கிய தின விழா

பரமக்குடி,மே16: பரமக்குடி அருகே சூடியூர் கிராமத்தில் தாவிர ஆரோக்கிய தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது. இதில் பாரம்பரிய நெல் ரகங்கள் கண்காட்சி, இயற்கை திரவ உயிர் உரங்கள் செயல் விளக்கம், இயற்கை முறை பூச்சி விரட்டிகள் செயல் விளக்கம், வாழை, பருத்தி, நெல் மற்றும் பயிறு வகைகளுக்கு ஒருங்கிணைந்த பூச்சி மேலாண்மை முறைகள் குறித்து செயல் விளக்கம் நடத்தப்பட்டது. பாரம்பரிய நெல் கண்காட்சியில் பூதக்காளி கருப்பண், கிச்சடி சம்பா, மொட்ட குருவை, கொச்சு சம்பா, கல்கி சம்பா, கொடவாழை, ஆறுபத்தம் குருவை, செங்கல்பட்டு சிறுமணி போன்று 15க்கும் மேற்பட்ட நெல் ரகங்கள் விவசாயிகளுக்கு காண்பிக்கபட்டன.

மகாகனி, புங்கம், வேங்கை,வேம்பு, தேக்கு போன்ற மரங்கள் விழாவில் நடப்பட்டன. விழாவிற்கு பரமக்குடி வேளாண்மை துணை இயக்குநர் மனோகரன், விதை அலுவலர் பாலமுத்து, துணை வேளாண் அலுவலர் கருணாகரன், பார்த்திபனூர் காவல் துணை ஆய்வாளர் கோபால், சூடியூர் கிராமத் தலையாரி நாராயணன் சிறப்பு விருந்தினர்களாக விழாவை சிறப்பித்தனர். விழாவினை கிராம ஒத்துழைப்புடன் நம்மாழ்வார் வேளாண்மை மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி இறுதியாண்டு ஆதிரா குழு மாணவர்கள் ஒருங்கிணைத்தனர்.

The post பரமக்குடி அருகே ஆரோக்கிய தின விழா appeared first on Dinakaran.

Tags : Arogya Day Festival ,Paramakkudy ,Paramakkudi ,Sudiyur ,Tavira Arogya Day ,
× RELATED மானாமதுரை அருகே பொக்லைன் மீது அரசுப்...