×

வெப்பம் தணித்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி

ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் நேற்று மேகமூட்டத்துடன் கூடிய மழை பெய்ததால், வெப்பம் தணிந்து குளுமையான சூழலால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். தென்மாவட்டங்களில் குறிப்பிட்ட இடங்களில் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் ராமேஸ்வரம் தீவில் நேற்று முன்தினம் பகலில் வெயிலும் இரவில் மழை என வானிலை மாறி மாறி காணப்பட்டது. குறிப்பாக ராமேஸ்வரத்தில் நேற்று காலை முதல் மேகமூட்டத்துடன் கூடிய வானிலை நிலவியது. தொடர்ந்து பரவலாக மழை பெய்ததால் வெப்பச் சலனம் தணிந்து குளுமையான சூழல் உருவானது. இதனால் ராமேஸ்வரம் வந்த சுற்றுலாப் பயணிகளும் உள்ளூர்வாசிகளும் மகிழ்ச்சி அடைந்தனர்.

பக்தர்கள் மழையில் நனைந்தபடி கோயில் 22 தீர்த்தங்களில் புனித நீராடினர். மேலும் ராமேஸ்வரம் முதல் பாம்பன் வரை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே மழைநீர் தேங்கி நின்றது. நண்பகல் வரை மலைப்பகுதியைப் போன்ற வானிலை தொடர்ந்ததால் சுற்றுலாப் பயணிகள் அரிச்சல்முனை தனுஷ்கோடியில் நீண்ட நேரம் சுற்றி பார்த்தனர். கோடை மழை பொழிவால் தீவு முழுவதும் குளிர்ந்த காற்று வீசி மக்களை வெப்பத்தில் இருந்து பாதுகாத்துள்ளது.

The post வெப்பம் தணித்த மழையால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Dinakaran ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை