×

சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல்

சிவகங்கை, மே 16: சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கலெக்டர் ஆஷாஅஜித் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:முத்துப்பட்டி அரசு ஐடிஐல் 2024ம் ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. எலெக்ட்ரீசியன், பிட்டர், வெல்டர், கணினி இயக்குபவர் மற்றும் திட்டமிடுதல் உதவியாளர்(கோபா) மற்றும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மெக்கானிக் எலெக்ட்ரில் வெகைல், அட்வான்ஸ்டு சிஎன்சி மெக்கானிக் டெக்னிசியன், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ், டிஜிட்டல் மேனுபாக்டரிங் டெக்னிசியன் ஆகிய தொழிற் பிரிவுகளுக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ, மாணவியர் விண்ணப்பிக்கலாம்.

பற்றவைப்பவர் (வெல்டர்) தொழிற்பிரிவில் சேர எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவ,மாணவிகள் விண்ணப்பிக்கலாம். www.skilltraining.tn.gov.in என்ற இணையதளத்தில் ஜுன் 7ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். மற்றும் முத்துப்பட்டி அரசு ஐடிஐல் சேர்க்கை மையம் செயல்பட்டு வருகிறது. ஐடிஐக்கு சேர்க்கைக்கு வரும் மாணவர்கள் மாற்றுச்சான்றிதழ், மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழ், கலர் போட்டோ 5, ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் 2நகல் கொண்டு வரவேண்டும். ஐடிஐயில் சேரும் மாணவ,மாணவிகளுக்கு இலவச பாடப்புத்தகம் விலையில்லா மடிக்கணினி, மிதிவண்டி, சீருடைகள், காலணிகள், இலவச பஸ் பாஸ், உதவித்தொகை மாதம் ரூ.750ஆகியவை வழங்கப்படும். புதுமைப்பெண் திட்டம் மூலம் மாணவிகளுக்கு ரூ.1000 வழங்க வழிவகை செய்யப்படும்.

பயிற்சியின் போது பிரபல தொழில் நிறுவனங்களில் பயிற்சியும், பயிற்சிக் காலம் முடிந்தவுடன் வேலைவாய்ப்பும் ஏற்பாடு செய்து தரப்படும். கூடுதல் விவரங்களுக்கு 99654 80973, 97904 01672, 63854 75657, 99420 99481 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post சிவகங்கை அருகே முத்துப்பட்டி அரசு ஐடிஐயில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Muthupatti ,Govt ,ITI ,Sivaganga ,Sivagangai ,Muthupatti Government ,Collector ,Asha Ajith ,Dinakaran ,
× RELATED அரியலூர் அரசு ஐடிஐயில் மாணவர்கள்...