×
Saravana Stores

இன்று முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு

ஆண்டிபட்டி: தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை ஆகிய மாவட்டங்களில் உள்ள கண்மாய்களில் தண்ணீரை பெருக்கும் தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது. அதன்படி 15 நாட்களுக்கு மூன்று கட்டங்களாக தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டது. முதல் கட்டமாக ராமநாதபுரம் மாவட்டத்திற்காக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.

கடந்த 5 நாட்களாக திறக்கப்பட்ட தண்ணீர் நேற்று காலை நிறுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து இன்று காலை முதல் சிவகங்கை மாவட்ட தேவைக்காக வைகை அணையில் இருந்து வினாடிக்கு 1500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட உள்ளது. இன்று முதல் வருகிற 19ம் தேதி வரையில் நான்கு நாட்களுக்கு தண்ணீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. அதன் பின்னர் மதுரை மாவட்ட தேவைக்காக தண்ணீர் திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

அணைக்கு நீர்வரத்து இல்லாத நிலையில் கூடுதலான தண்ணீர் திறக்கப்பட்டு வருவதால் வைகை அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென சரிந்து வருகிறது. தற்போது 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 50 அடியாக சரிந்துள்ளது. கடந்த 5 நாட்களில் வைகை அணையின் நீர்மட்டம் சுமார் 7 அடி வரை சரிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

The post இன்று முதல் வைகை அணையில் இருந்து சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Vaigai Dam ,Sivagangai district ,Andipatti ,Theni ,Kanmais ,Ramanathapuram ,Sivagangai ,Madurai ,
× RELATED கை, கழுத்து அறுபட்டு சாலையில் வீசப்பட்ட பச்சிளம் ஆண் குழந்தை மீட்பு