×

வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு

வத்திராயிருப்பு, மே 16: வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் உயிருடன் மீட்கப்பட்டது.
வத்திராயிருப்பபு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மான், மிளா, காட்டு எருமை, பன்றி, யானை உள்ளிட்ட வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து விலங்குகள் அவ்வப்போது இப்பகுதியில் உள்ள விளைநிலங்களுக்குள் தண்ணீர் தேடியும், இரை தேடியும் வருகின்றன. இவ்வாறு வரக்கூடிய வனவிலங்குகள் ஊரில் உள்ள உள்ள கிணற்றுக்களில் விழுந்து விடுகின்றன. இந்த நிலையில் நேற்று வனப்பகுதியில் இருந்து சுமார் ஒன்றரை வயது மதிக்கத்தக்க மான்குட்டி இரை தேடி மேற்கு வ.புதுப்பட்டி மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள ராமகிருஷ்ணன் என்பவரது தோப்பிற்குள் நுழைந்த பொழுது அங்கிருந்த கிணற்றுக்குள் தவறி விழுந்துவிட்டது. உடனடியாக அக்கம்பக்கத்தினர் வத்திராயிருப்பு தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறை வீரர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்த மான் குட்டியை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

The post வத்திராயிருப்பு அருகே கிணற்றில் தவறி விழுந்த மான் மீட்பு appeared first on Dinakaran.

Tags : Vastrayiripu ,Vatrarippa ,Vatheriraippa ,Wathirairuppu West Range ,Vathirairipu ,
× RELATED 36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத்...