×

செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம்

திருப்பூர்: திருப்பூரில் செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் குத்தி கொலை செய்யப்பட்டார். இதை கண்டித்து வடமாநில தொழிலாளர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

பீகார் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆகாஷ் குமார் (21). திருமணமாகாதவர். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பூர் காலேஜ் ரோடு பகுதியில் உள்ள ஹாஸ்டலில் தங்கி அருகில் உள்ள பனியன் நிறுவனத்தில் டெய்லராக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் பணி முடிந்து காலேஜ் ரோட்டில் உள்ள பாப்புஸ் பேக்கரி அருகில் நடந்து சென்றபோது அவ்வழியாக பைக்கில் வந்த 3 பேர், ஆகாஷ்குமாரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போனை கேட்டுள்ளனர். ஆனால், அவர் கொடுக்க மறுத்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஆகாஷ்குமாரின் வயிற்றில் குத்தி செல்போனை பறித்து கொண்டு தப்பினர். ஆகாஷ் குமார் ரத்தம் வழிந்தபடியே ஹாஸ்டலுக்கு சென்றார். அங்கிருந்தவர்கள் அவரை திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் குமார் நேற்று காலை உயிரிழந்தார்.

இந்த தகவலறிந்து வடமாநில தொழிலாளர்கள் திருப்பூர் கணியாம் பூண்டி பகுதியில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்து போலீசார் வந்து பேச்சுவார்த்தை நடத்தி, குற்றவாளிகாளை விரைவில் கைது செய்வோம் என உறுதியளித்தனர். இதனை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

The post செல்போன் பறிப்பை தடுத்த வடமாநில வாலிபர் கொலை: திருப்பூரில் தொழிலாளர்கள் போராட்டம் appeared first on Dinakaran.

Tags : State ,Tirupur ,North ,Akash Kumar ,Bihar ,
× RELATED போலி ஆதார் கார்டு தயாரித்து...