×

10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் புளியங்குடி கண்ணா இண்டர்நேசனல் பள்ளி மாவட்டத்தில் முதல் இடம்

புளியங்குடி, மே 16: புளியங்குடி கண்ணா இண்டர்நேசனல் பள்ளி 10ம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத்தேர்வில் மாவட்டத்தில் முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. மாணவர் கவின் அனிருத் 487 மதிப்பெண்கள் பெற்று தென்காசி மாவட்டத்தில் முதல் இடம் பிடித்துள்ளார். மாணவிகள் ராஜலட்சுமி 484 மதிப்பெண்களும், அபர்ணா 482 மதிப்பெண்களும், மாணவர் உதய்ராஜா 481 மதிப்பெண்களும், கீர்த்திகா 480 மதிப்பெண்களும் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். தமிழ், கணிதத்தில் இரண்டு மாணவர்கள் 100 மதிப்பெண்கள் பெற்றனர். தேர்வு எழுதிய மாணவர்களில் 475க்கு மேல் 5பேரும், 450க்கு மேல் 13 பேரும், 400க்கு மேல் 33 மாணவர்களும் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வு எழுதிய அனைவரும் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளனர். வெற்றி பெற்ற மாணவர்களையும், அவர்கள் வெற்றிக்கு வழிகாட்டியாக இருந்த ஆசிரியர்களையும் பள்ளி சேர்மன் பிரகாஷ் கண்ணா, தாளாளர் லக்ஷ்மி பிரியா, முதல்வர் பிரேமா சரவணன் மற்றும் ஆசிரியர்கள், பெற்றோர்கள் பாராட்டினர்.

The post 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் புளியங்குடி கண்ணா இண்டர்நேசனல் பள்ளி மாவட்டத்தில் முதல் இடம் appeared first on Dinakaran.

Tags : Buliangudi Khanna International School ,CBSE ,Buliangudi ,Gavin Anirudh ,Tenkasi ,Rajalakshmi ,Puliangudi Khanna International School district ,Dinakaran ,
× RELATED புதுச்சேரியில் சிபிஎஸ்இ பாடத்திட்டம்...