×

தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம், மே 16: தீவட்டிப்பட்டி அருகே நடந்த தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. தீவட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் கோயிலில், சாமி கும்பிடுவது தொடர்பாக நடந்த கலவரத்தில் கடைகள் தீ வைத்து எரிக்கப்பட்டன. இதனை கண்டித்தும், கலவரத்தை ஏற்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், நேற்று சேலம் கோட்டையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. அம்பேத்கரைட் பார்ட்டி ஆப் இந்தியா சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாநில தலைவர் அம்பேத்கர் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தீ வைப்பு சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும், பாதிக்கப்பட்டவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.

The post தீ வைப்பு சம்பவத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Tags : Salem ,Deevattipatti ,Mariamman temple ,Dinakaran ,
× RELATED சேலம் மாரியம்மன் தேரோட்டம்: அடிப்படை வசதிசெய்து தர ஐகோர்ட் ஆணை