×

அரூரில் 19ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு

அரூர், மே 16: தர்மபுரி மாவட்டத்தில் நாளை 17ம்தேதி தொடங்கி, 19ம்தேதி வரை பலத்த மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. எனவே, பொதுமக்கள் மழைபெய்யப் போகும் இந்த நாட்களில் பாதுகாப்புடன், கவனமுடன் இருக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. கனமழை பெய்யும் போதும் அல்லது பெய்த பின்பு மரங்களின் கீழ் நிற்பதோ அல்லது மின்சார கம்பங்களின் கீழ் நிற்பதை தவிர்க்கவும். கால்நடைகளை மின்சார கம்பங்களில் கட்ட வேண்டாம். மேலும், கோடை விடுமுறையில் வீட்டில் உள்ள குழந்தைகளை தேவையின்றி வெளியே அனுப்ப வேண்டாம். மழை பெய்யும் இந்த நாட்களில் நீர்நிலைகளின் அருகில் அல்லது பெரும் பள்ளங்கள் உள்ள இடங்களில் செல்வதையோ தவிர்க்கும் வகையில் குழந்தைகளுக்கு உரிய அறிவுரைகளை பெற்றோர் வழங்க வேண்டும் என ஆர்டிஓ வில்சன் ராஜசேகர் கேட்டுக் கொண்டுள்ளார்.

The post அரூரில் 19ம்தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு appeared first on Dinakaran.

Tags : Arur ,Aroor ,Meteorological Department ,Dharmapuri district ,Dinakaran ,
× RELATED ஆரூர் ஆழித் தேர்