×
Saravana Stores

கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம்

காரிமங்கலம், மே 16: காரிமங்கலம் வட்டார வேளாண் உதவி இயக்குநர் புவனேஸ்வரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தற்போது மாவட்டத்தில் பரவலாக கோடை மழை பெய்து வருவதால், விவசாயிகள் பயிர் சாகுபடி பணிகளை தொடங்கி உள்ளனர். கோடை உழவு செய்வதால் நிலத்தில் பல்வேறு நன்மைகள் கிடைக்கும். கோடை உழவு செய்யும் போது, வெப்பமும், குளுமையும் மண்ணுக்கு கிடைக்கும். மண்ணை புரட்டி விடும் போது, முதலில் மண் வெப்பம் ஆவியாகி, பிறகு குளுமை அடையும். மண்ணின் கட்டுமானம் பலப்படும். மழைநீர் நிலத்தில் ஊடுருவி அடிப்பகுதிக்கு சென்று தங்கி ஈரப்பதம் காக்கப்படுகிறது. மேலும், மழைநீரானது வளி மண்டலத்தில் நிறைந்துள்ள நைட்ரேட் என்ற வேதிப்பொருளுடன் இணைந்து, மண்ணில் உள்ள தழை சத்தினை அதிகரிக்க செய்யும். கோடை உழவினை சரிவுக்கு குறுக்காக உழவேண்டும். இதனால் மண் வளமும் அதிகரிக்கிறது. கோடை உழவுக்கு பிறகு சிறுதானியங்கள், நிலக்கடலை, எள் மற்றும் பயிறு வகை பயிர்களை சாகுபடி செய்து பயன் பெறலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

The post கோடை உழவு செய்து விவசாயிகள் பயன்பெறலாம் appeared first on Dinakaran.

Tags : Karimangalam ,Assistant Director of Agriculture ,Karimangalam Bhubaneswari ,Dinakaran ,
× RELATED நடப்பு சம்பா பருவத்திற்கு விவசாயிகள்...