×

படிகளில் இறங்கியபோது வடமாநில வாலிபர் வழுக்கி விழுந்து பலி

மதுரை, மே 16: அசாம் மாநிலம், சோனேட்பூரைச் சேர்ந்தவர் சந்தன் நேவார் (32). கடந்த, 9ம் தேதி அவரது மாநிலத்தைச் சேர்ந்த மிலன்குமார் டாக்கால் என்பவருடன் மதுரை, கோச்சடையில் உள்ள காபி கடைக்கு வேலைக்கு வந்தார். 12ம் தேதி காலை 11 மணியளவில் கடையின் மாடியில் இருந்து இறங்கும்போது, சந்தன் நேவார் வழுக்கி விழுந்து தலையில் படுகாயமடைந்துள்ளார். மீட்கப்பட்ட அவர், அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.அங்கு, சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், உணவு சாப்பிட சென்ற அவர் மீண்டும் திரும்பி வந்தபோது தலைசுற்றி மறுபடியும் கீழே விழுந்துள்ளார். அதில், ஏற்கனவே அடிபட்ட இடத்திலேயே மீண்டும் பலத்த காயம் ஏற்பட்டதால், சந்தன் நேவாரை மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, தனியார் மருத்துவமனை டாக்டர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதன்படி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த சம்பவம் குறித்து எஸ்.எஸ்.காலனி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.

The post படிகளில் இறங்கியபோது வடமாநில வாலிபர் வழுக்கி விழுந்து பலி appeared first on Dinakaran.

Tags : North State ,Madurai ,Chandan Newar ,Sonedpur, Assam ,Kochadai, Madurai ,Milankumar Taghal ,Dinakaran ,
× RELATED பல்லாவரம் அருகே பரபரப்பு; பிளாஸ்டிக்...