- முதல்வர்
- எம். ஸ்டால்
- செங்கல்பட்டு மாவட்டம்
- சென்னை
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- முதல் அமைச்சர்
- மு.கே ஸ்டாலின்
- சிலாவதம்
- கடலூர் மாவட்டம்
- பண்ருட்டி வட்டம்
- மேலபட்டம்பாக்கம்
- தின மலர்
சென்னை:செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 இடங்களில் நடந்த சாலை விபத்துகளில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மு.க. ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சிலாவட்டம் அருகே விபத்து: கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டம், மேல்பட்டம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் நான்கு சக்கர வாகனத்தில் சென்னை விமான நிலையத்திற்கு சென்றுவிட்டு திரும்பும் வழியில் செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் வட்டம், சிலாவட்டம் அருகே திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று அதிகாலை தனக்கு முன்னதாக சென்ற லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன். காயமடைந்தவ ருக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட் டுள்ளேன்.
வாயலூர் அருகே விபத்து: இதேபோல், செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் வட்டம், வாயலூர் கிராமம், கிழக்குக் கடற்கரை சாலையில் நேற்று முன் தினம் இரவு நேரத்தில் பாண்டிச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக மரத்தின் மீது மோதிய விபத்தில், 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் மேலும் ஒருவர் உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியை அறிந்து மிகவும் வேதனையடைந்தேன்.
இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
The post செங்கல்பட்டு மாவட்டத்தில் 2 சாலை விபத்துகள் உயிரிழந்தவர்கள் குடும்பத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல் appeared first on Dinakaran.