கொடைக்கானல், மே 16: கொடைக்கானல் நகர் பகுதியில் காட்டு மாடுகள் உலா வருவது வாடிக்கையாகி விட்டது. கடந்த சில நாட்களாக கூட்டத்தில் இருந்து பிரிந்த ஒரு காட்டு மாடு சில நாட்களாக ஏரி சாலை, லோயர் சோலை பகுதியில் சுற்றி திரிந்தது. இந்நிலையில் நேற்று அந்த காட்டு மாடு டிப்போ பகுதியில் இறந்து கிடந்தது. தகவலறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் காட்டு மாடு உடலை பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர். இறந்த காட்டு மாடு உணவு உண்ணாமல் சுகவீனமாகவும், பலவீனமாகவும் சுற்றி திரிந்ததாக வனத்துறையினர் தெரிவித்தனர்.
The post கொடைக்கானலில் காட்டு மாடு பலி appeared first on Dinakaran.