×
Saravana Stores

உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா: அதிபர் ஜெலன்ஸ்கியின் வௌிநாட்டு பயணங்கள் ரத்து

கீவ்: உக்ரைன் மீது கடந்த 2022 பிப்ரவரி 24ம் தேதி ரஷ்யா போர் தொடுத்த நிலையில் 2 ஆண்டுகளை கடந்தும் போர் நீடிக்கிறது. இந்த போரில் உக்ரைன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு முக்கிய நகரங்கள் சின்னாபின்னமாகி விட்டன. அப்பாவி மக்கள் உயிரிழப்பதும் நீடிக்கிறது. உக்ரைன் – ரஷ்யா போரை முடிவுக்கு கொண்டு வர ஐநா மற்றும் சர்வதேச நாடுகள் எடுக்கும் முயற்சி இன்னும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று அதிகாலை பெல்கொரோட் பகுதியில் உக்ரைனின் 9 ஆளில்லா விமானங்கள், 2 வில்ஹா ராக்கெட்டுகள், 2 ரேடார் எதிர்ப்பு ஹார்ம் ஏவுகணைகளை ரஷ்யாவின் வான்பாதுகாப்பு படை சுட்டு வீழ்த்தியது. இதையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தன் ஸ்பெயின் மற்றும் போர்ச்சுக்கல் பயணங்களை ரத்து செய்துள்ளார்.

The post உக்ரைன் மீது தாக்குதலை தீவிரப்படுத்தும் ரஷ்யா: அதிபர் ஜெலன்ஸ்கியின் வௌிநாட்டு பயணங்கள் ரத்து appeared first on Dinakaran.

Tags : Russia ,President ,Ukraine ,Kiev ,Zelensky ,Dinakaran ,
× RELATED ரஷ்ய அதிபர் புடினுடன் பிரதமர் மோடி...