×

காசாவில் கர்னல் காலே மரணத்துக்கு இந்தியா இரங்கல்

புதுடெல்லி: சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை மீறி காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. இந்நிலையில் காசா மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியாவின் ஓய்வுபெற்ற கர்னல் வைபவ் அனில் காலே கொல்லப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அணில் காலே காசாவின் ஐநா பாதுகாப்பு துறையில் பணியாற்றி வந்தார். திங்களன்று காலே சென்று கொண்டிருந்த கார் வாகனத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்தார். இந்தியாவை சேர்ந்த கர்னல் உயிரிழந்துள்ளதற்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக வெளியுறவு துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், காசாவில் கடந்த 13ம் தேதி ஐநா பாதுகாப்பு துறையின் பாதுகாப்பு ஒருங்கிணைப்பு அதிகாரி கர்னல் வைபவ் அனில் காலே உயிரிழப்புக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவிக்கிறோம். நியூயார்க்கில் உள்ள ஐநாவுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரகமும், டெல் அவிவ் ம்றறும் ரமல்லாவில் உள்ள தூதரகங்களும் மறைந்த கர்னல் காலேவின் உடலை இந்தியாவிற்கு அனுப்பி வைப்பதற்கான அனைத்து உதவிகளையும் செய்து வருகின்றன” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

The post காசாவில் கர்னல் காலே மரணத்துக்கு இந்தியா இரங்கல் appeared first on Dinakaran.

Tags : India ,Colonel Kale ,Gaza ,New Delhi ,Israel ,Colonel ,Vaibhav Anil Kale ,Kale ,
× RELATED தெற்கு காசாவின் ரஃபா நகரம் மீது...