- ஸ்லோவாகியா
- பிற்பகல்
- பாரக்
- ராபர்ட் பிகோ
- ராபர்ட் பிகோ
- ஸ்லோவாக்கியாவின் பிரதமர்…
- ஸ்லோவாக்கியாவின் பிரதமர்
- தின மலர்
பராக்: ஸ்லோவாக்கியா பிரதமர் ராபர்ட் பிகோ மீது மர்ம நபர்கள் நேற்று துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் பலத்த காயமடைந்த அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஸ்லோவாக்கியா நாட்டின் பிரதமராக ராபர்ட் பிகோ(59) பதவி வகித்து வருகிறார். இவர் நேற்று தலைநகரில் இருந்து 150கிமீ தொலைவில் உள்ள ஹண்ட்லோவா நகரில் உள்ள கலாச்சார மையத்தில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கலந்து கொண்டார்.
பின்னர் வௌியே வந்த ராபர்ட் பிகோ செய்தியாளர்களை சந்தித்து கொண்டிருந்தார். அப்போது முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் நான்கு முறை தொடர்ந்து சுட்டதில் பிரதமர் ராபர்ட் பிகோவின் வயிற்றில் குண்டு பாய்ந்தது. மேலும் அவரது மார்பிலும் குண்டு பாய்ந்தது. இதில் ரத்த வௌ்ளத்தில் சாய்ந்த பிகோ, மருத்துமனையில் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதனிடையே துப்பாக்கி சூடு நடத்திய மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கி சூடு: உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை appeared first on Dinakaran.