- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- நெல்லா
- தூத்துக்குடி
- வானிலையியல்
- சென்னை
- வானிலை ஆய்வு நிலையம்
- அக்னி-ஸ்டார்
- வானிலை ஆய்வு மையம்
சென்னை: அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 4ம் தேதி அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் காலம் தொடங்கியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக அடுத்த சில நாட்களிலேயே தமிழகத்தில் கோடை மழை என்பது பெய்ய தொடங்கியது. இதனால் பொதுமக்கள் கத்திரி வெயிலில் இருந்து தப்பித்துள்ளனர். மேலும் பல மாவட்டங்களில் மழை பெய்து கோடை வெயிலுக்கு பதில் குளுகுளு சீதோஷ்ண நிலை நிலவி வருகிறது. இதற்கிடையே தான் தமிழகத்தில் மேல் வளிமண்டல கீழடுக்குகளில் காற்றின் திசை மாறுபாடு மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு இலங்கை கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால் பல மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாமக்கல், மதுரை, காஞ்சிபுரம், தஞ்சை, திருவாரூர், சிவகங்கை, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், விழுப்புரம், திருவண்ணாமலை , அரியலூர், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், தேனி, தென்காசி, திண்டுக்கல், நீலகிரி, கோவை, ஈரோடு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 22 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.