×
Saravana Stores

தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்

சென்னை: ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில் கடந்த சில நாட்களாக பரவலாக பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. கோடை மழை பெய்து வரும் நிலையில், குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி , தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

10 செ.மீ.க்கும் அதிகமாக மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், 3 மாவட்ட ஆட்சியர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. நெல்லை மாவட்டத்திற்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டதன் எதிரொலியாக பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் அறிவுறுத்தியுள்ளார். மேலும் பொதுமக்கள் தகுந்த முன்னெச்சரிக்கையுடன், இருக்க வேண்டும் எனவும் மழை நேரங்களில் மரங்கள், மின்கம்பங்கள், நீர் நிலைகள் அருகில் செல்ல வேண்டாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post தீவிர மழைக்கான ஆரஞ்சு அலர்ட்; பொதுமக்கள் முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க நெல்லை மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Rice District ,Chennai ,Nelya ,Tamil Nadu ,Dinakaran ,
× RELATED சென்னை சென்ட்ரலில் இருந்து போடி சென்ற ரயில் மதுரை அருகே தடம் புரண்டது