×

பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை புறக்கணித்த நிதிஷ் குமார்?.. பாஜகவை தோற்கடிக்கவே நிதிஷ் விரும்புவதாக தேஜஸ்வி யாதவ் பேச்சு..!!

பீகார்: மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு எதிரான தங்களது போராட்டத்துக்கு பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமாரின் முழு ஆதரவு உள்ளதாக ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளது தேசிய ஜனநாயக கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல் செய்தபோது தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் பலரும் பங்கேற்றனர். ஆனால் பாஜகவின் முக்கிய கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தள தலைவரும் பீகார் முதலமைச்சருமான நிதீஷ் குமார் பங்கேற்காதது பல்வேறு கேள்விகளை எழுப்பியது.

இந்நிலையில் பீகார் மாநிலம் மதுபானி பகுதியில் நடைபெற்ற பிரச்சாரத்தில் பேசிய ராஷ்ட்ரிய ஜனதா தல கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் மோடியின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் நிதிஷ்குமார் பங்கேற்காததை சுட்டிக்காட்டி பாஜகவுக்கு எதிரான போராட்டத்திற்கு நிதிஷ் குமாரின் முழு ஆதரவு உள்ளதாக தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தேஜஸ்வி யாதவ்; 2014ல் வந்தவர்கள் 2024ல் போய் விடுவார்கள் என இரண்டு மாதங்களுக்கு முன்பு நிதிஷ் குமார் பேசியதை சுட்டிக்காட்டினார்.

அவர் காட்டிய பாதையில் தங்கள் செல்வதாகவும், நிதிஷ் குமார் ஆசீர்வாதம் மற்றும் வழிக்காட்டுதலுடன் பாஜகவை தோற்கடிப்போம் என்றும் தேஜஸ்வி யாதவ் தெரிவித்தார். உடல்நல குறைவு காரணமாக நிதிஷ் குமாரின் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், பட்னாவில் நடைபெற்ற மோடியின் ரோடு ஷோவில் நிதிஷ் குமார் கண்ணியமாக நடத்தப்படாததே வாரணாசி செல்லாததற்கு காரணம் என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

The post பிரதமர் மோடி வேட்பு மனுத் தாக்கலை புறக்கணித்த நிதிஷ் குமார்?.. பாஜகவை தோற்கடிக்கவே நிதிஷ் விரும்புவதாக தேஜஸ்வி யாதவ் பேச்சு..!! appeared first on Dinakaran.

Tags : Nitish Kumar ,Modi ,Tejasvi Yadav ,Nitish ,BJP ,Bihar ,Chief Minister ,Lok Sabha elections ,National Democratic Alliance ,PM Modi ,Varanasi ,
× RELATED மோடி மீண்டும் முதல்வராவார்’...