×

தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

சென்னை : தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம் தகவல் அளித்துள்ளது. இதையடுத்து மாவட்ட அளவிலான செயல் திட்டத்தை கடைபிடித்து டெங்குவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அனைத்து மாவட்ட சுகாதார அலுவலர்களுக்கும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் வழிகாட்டுதல்கள் அனுப்பியுள்ளார்.

அவை பின்வருமாறு..

*திருப்பூர், கோவை, மதுரை, தேனி, நாமக்கல், அரியலூர் மாவட்டங்களில் டெங்கு காய்ச்சல் அதிகரித்துள்ளது. திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களிலும் டெங்கு பாதிப்பு அதிகரித்துள்ளது. ஆகவே டெங்கு காய்ச்சலுக்கான வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க அறிவுறுத்தப்படுகிறது.

*கிருஷ்ணகிரி, தஞ்சை மாவட்டங்களில் நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்த வேண்டும்.

*டெங்கு காய்ச்சலுக்கான அறிகுறிகள் தென்பட்டால் மருத்துவமனையை உடனே அணுக வேண்டும்.

*தினசரி அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சல் குறித்தான விவரங்களை பதிவேற்றம் செய்து சமர்ப்பிக்க வேண்டும்.

*இன்புளூயன்சா, மஞ்சள் காமாலை மூளைக்காய்ச்சல், நீர்ச்சத்து குறைபாடு கொண்ட உள்நோயாளிகள் பொதுவான அறிகுறிகள் கொண்டவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும்.

*சுகாதார மாவட்டம் வரியாக தொடர்ந்து டெங்கு பாதிப்புகள் குறித்தான விவரங்கள் சேகரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட வேண்டும்.

*மருந்து, மாத்திரைகள், தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியாளர்கள் ஆகியவை தயார் நிலையில் வைத்துக் கொள்ள வேண்டும்.

*கிராம, நகர மற்றும் மாநகர வாயிலாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கொசு புழு ஒழிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.

*வீடு வீடாக சென்று கொசு புழு ஒழிப்பு பணிகளை மேற்கொள்வதுடன், கொசு புழு உற்பத்தியாகாமல் பராமரிக்கிறார்களா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும்.

*பொது சுகாதாரத் துறைக்கு மாவட்ட வாரியாக தினசரி காலை 8 மணி முதல் மாலை 8 மணி வரை மேற்கொள்ளப்பட்ட பணிகள் குறித்தான விவரங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

*உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு அனுப்பி நோய் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

*தினசரி செயல்பாடுகள், மருந்துகள் இருப்பு, மருத்துவ பணியாளர்களுக்கு பயிற்சி, கொசு உற்பத்தியை கட்டுப்படுத்தும் நடவடிக்கை தொடர்பாக தினசரி அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும்

The post தமிழகத்தில் 8 மாவட்டங்களில் டெங்கு பாதிப்பு அதிகரிப்பு.. நோய்த்தடுப்பு நடவடிக்கைகளை துரிதப்படுத்துக : சுகாதாரத்துறை அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Department of Health Instruction ,Chennai ,Ministry of Public Welfare ,Health Department Instruction ,
× RELATED அரசின் திட்டங்களால் அரசு பள்ளிகளில்...