×

பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது!!

கடலூர் :பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது செய்யப்பட்டார். கடந்த 2023-2024ம் நிதியாண்டிற்கான 15வது திட்ட நிதிக்குழு திட்டத்தின்படி கடலூர் மாவட்டம், பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மஞ்சக்குழி கிராம ஊராட்சியில் குடிநீர் வழங்கும் திட்டம் மற்றும் மழைநீர் வடிகால் அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள ஓம் சக்தி கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தின் அடிப்படையில் வழங்கப்பட்டிருந்தது. அந்த பணிகளை மேற்கொண்ட திரு.P.சந்தோஷ், வயது 33, த/பெ. பாண்டியன், எண்.503, நாகவள்ளி அம்மன் கோயில் தெரு. B.முட்லூர் அஞ்சல், புவனகிரி வட்டம், கடலூர் மாவட்டம் என்பவரிடம் மேற்சொன்ன மஞ்சக்குழி கிராம ஊராட்சி மன்ற தலைவர் திரு.S.சற்குருநாதன் என்பவர் மேற்சொன்ன பணிகளை செய்தமைக்காக தனக்கு 2% கமிஷனாக லஞ்சப்பணம் ரூ.30,000/- தர வேண்டும் என்று கேட்டார். அதற்கு மேற்சொன்ன சந்தோஷ் அவ்வளவு பணம் என்னால் ஒரே நேரத்தில் தயார் செய்ய முடியாது என கூறியுள்ளார்.

அதற்கு ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதன் இரண்டு தவணைகளாக தலா ரூ.15,000/- என்று கொடுத்துவிடு என்று கூறியுள்ளார். மேற்சொன்ன ஊராட்சி மன்ற தலைவர் சற்குருநாதனுக்கு லஞ்சம் கொடுக்க விரும்பாத சந்தோஷ், கடந்த 14.05.2024 ந்தேதியன்று கடலூர் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்தில், நடவடிக்கை எடுக்கவேண்டி புகார் மனு கொடுத்துக்கொண்டார். அவரது புகார் மனு மீது கடலூர் ஊ.த.க. பிரிவு கு.எண்.5/2024, பிரிவு 7 of The Prevention of Corruption (Amendment) Act, 2018 14 5 क्री செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து இன்று 15.05.2024ம் தேதி சந்தோஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு போலீசார் அறிவுரைப்படி, ஊராட்சிமன்ற தலைவருக்கு இரசாயன பவுடர் தடவிய ரூ.15,000/-த்தை லஞ்சமாக கொடுத்தபோது, அங்கு மறைந்திருந்த கடலூர், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, கூடுதல் காவல் கண்காணிப்பாளர், திரு.ந.தேவநாதன் தலைமையிலான போலீசார் லஞ்சபணம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் திரு.S.சற்குருநாதன் என்பவரை விசாரணை செய்து கைது செய்தனர்.

மேலும் மஞ்சக்குழியில் உள்ள அவரது வீட்டிலும் சோதனை மேற்கொண்டு முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். மேலும் கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கி வரும் உதவி இயக்குநர், தணிக்கை அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வழக்கு சம்மந்தப்பட்ட ஆவணங்களை கைப்பற்றினர். பின்னர் கைது செய்யப்பட்ட மஞ்சக்குழி கிராம ஊராட்சி மன்ற தலைவர் திரு.S.சற்குருநாதனை நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளார்.

The post பரங்கிப்பேட்டை அருகே லஞ்சம் வாங்கிய மஞ்சக்குழி ஊராட்சி மன்ற தலைவர் லஞ்ச ஒழிப்பு போலிசாரால் கைது!! appeared first on Dinakaran.

Tags : Manjakuzhi panchayat council ,Barangippet ,Cuddalore ,Manjakuzhi panchayat ,Parangippet ,15th Plan Finance Committee ,Manjakuzhi Village Panchayat ,Parangipettai Panchayat Union ,District ,Dinakaran ,
× RELATED பரங்கிப்பேட்டை அருகே பஸ் மீது பைக் மோதி 2 வாலிபர்கள் பலி