×

கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் கோதண்டராமர் கோயில் கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீனவர்கள் மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.ராமேஸ்வரம் தீவில் மழைக்காலங்களில் கடல் நீர்மட்டம் உயர்வதால் தனுஷ்கோடி பாக்ஜலசந்தி கடற்கரை பகுதியில், பல ஆற்றுவாய் வழியாக கடற்கரையை தாண்டி நிலப்பரப்பில் கடல்நீர் தேங்கி கடற்பரப்பை போன்று காட்சியளிக்கும்.

இதில் மிகவும் பள்ளமான இடங்களில் அதிகளவு கடல் நீர் தேங்கி குளம் போல் மாறி விடும். கோதண்டராமர் கோயில் எதிரே கடற்கரை நிலப்பரப்பில் குளம்போல் தேங்கி நிற்கும் கடல் நீரில் மீனவர்கள் மீன்வலையில் தடுப்பு வேலி அமைத்து மீன்பிடிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த தடுப்பு வேலி அமைப்பதால் ஆற்றுவாய் வழியாக வந்த மீன்கள் மீண்டும் கடலுக்கு செல்லாத வகையில் தடுத்து நிறுத்தப்படுகிறது.

குறிப்பாக கடல் பெருக்கு காலங்களில் அதிகளவு மீன்கள் கால்வாய் வழியாக இப்பகுதியில் குவியும். தடுப்பு வேலியால் மீன்கள் வேறு பகுதிக்கு செல்ல முடியாமல் கூட்டமாக ஆழமான இடத்தில் இருக்கும். இதனை மீனவர்கள் வலைகளை வீசி மீன்களை எளிதாக பிடித்து விற்பனை செய்கின்றனர். இந்த தடுப்பு வேலி மீன்பிடிப்பால் சிறிய மீன்கள் வெப்ப சலனத்தால் செத்து மிதக்கும் அபாயமும் உள்ளது. மேலும் குழி நண்டுகள் இனப்பெருக்கம் செய்து பின் மீண்டும் கடலுக்குள் செல்ல முடியாமல் நீர்த்தேக்க பகுதிகளிலே அழிந்து விடுகிறது என பாரம்பரிய மீனவர்கள் வேதனை தெரிவித்தனர்.

The post கடல் நீர்த்தேக்கத்தில் தடுப்புவேலி அமைத்து மீன் பிடிப்பு appeared first on Dinakaran.

Tags : Rameswaram ,Rameswaram Kothandaram Temple Sea Reservoir ,Rameswaram Island ,Dhanushkodi Bhagjalasandhi ,Dinakaran ,
× RELATED மின் தடையை சீரமைக்க கோரிக்கை