×

வாரணாசியில் பிரதமர் மோடிக்கு சத்ரபதி சிவாஜியின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை : எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!!

லக்னோ : வாரணாசியில் பிரதமர் மோடிக்கு சத்ரபதி சிவாஜியின் தலைப்பாகை அணிவிக்கப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. நேற்று வாரணாசி தொகுதியில் பிரதமர் மோடி வேட்பு மனு தாக்கல் செய்த நிகழ்வில், ஒன்றிய அமைச்சர்கள், மாநில முதல்வர்கள் உட்பட தேசிய ஜனநாயக கூட்டணியைச் சேர்ந்த பல்வேறு தலைவர்கள் கலந்து கொண்டனர். அப்போது [பிரதமர் மோடிக்கு தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் பிரஃபுல் படேல் மராட்டிய மன்னர் சத்ரபதி சிவாஜியின் தலைப்பாகையை அணிவித்து கவுரவித்தார். இதற்கு மராத்தா அமைப்பினரும் அரசியல் கட்சி தலைவர்களும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

தலைப்பாகையை பிரதமர் மோடிக்கு அணிவித்து சிவாஜியை அவமதித்து விட்டதாக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணியினர் கடுமையாக சாடியுள்ளனர். ஒருவரை கவுரவிக்க சிவாஜியின் தலைப்பாகையை கையில் தருவது தான் உகந்தது என்றும் தலையில் அணிவிப்பது ஏற்கத்தக்கதல்ல என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத்பவார் அணி தெரிவித்துள்ளது. இதற்கு தகுந்த பாடம் பகட்டும் வரை சுயமரியாதை மிக்க மராட்டிய மக்கள் ஓயமாட்டார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல காங்கிரஸ் நட்சத்திர பேச்சாளர் சச்சின் சாவந்த்,“பிரஃபுல் படேல் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜிரேடாப் அணிவித்தபோது வெட்கப்படவில்லையா? இது மகாராஷ்டிராவின் பெருமையின் மீதான தாக்குதல்,” என்றார்.

The post வாரணாசியில் பிரதமர் மோடிக்கு சத்ரபதி சிவாஜியின் தலைப்பாகை அணிவிக்கப்பட்டதால் சர்ச்சை : எதிர்க்கட்சிகள் கொந்தளிப்பு!! appeared first on Dinakaran.

Tags : Chhatrapati Shivaji ,Modi ,Varanasi ,Lucknow ,Union ,State Chief ,
× RELATED மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை பாஜ அனுமதிக்காது ; ஜே.பி.நட்டா பிரசாரம்