பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் உள்ள மாட்டு சந்தைக்கு, வாரந்தோறும் நடக்கும் சந்தை நாளின்போது, தமிழகத்தின் பல்வேறு மாவட்டம் மற்றும் வெளி மாநிலங்களிலிருந்தும் மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. இதனை பெரும்பாலும் கேரள வியாபாரிகளே வாங்கி செல்கின்றனர். கடந்த மாதம் துவக்கத்திலிருந்து, சந்தைக்கு மாடுகள் வரத்து அதிகமாக இருந்தது. அதுபோல் இந்த மாதத்தில் கடந்த 2 வாரமாக விற்பனை மந்தமாக இருந்தது. இதனால், மாடுகளை குறைவான விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது.
இந்த வாரத்தில் நேற்று நடந்த சந்தை நாளின்போது, வெளியூர்களிலிருந்து மாடுகள் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. சுமார் 1,500க்கும் மேற்பட்ட மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டது. மேலும், தற்போதைய சூல்நிலையில் கேரள பகுதியில் மாடு விற்பனை அதிகரிப்பால், பொள்ளாச்சிக்கு மாடுகளை வாங்க கேரள வியாபாரிகள் வருகை அதிகரித்தது. இதனால், மாடு விற்பனை விறுவிறுப்பானது. கடந்த வாரம் சுமார் ரூ.1.60 கோடிக்கே வர்த்தகம் நடைபெற்றது. ஆனால் நேற்று, கேரளா வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் ரூ.2 கோடி வரையிலும் வர்த்தகம் நடைபெற்றதாக, வியாபாரிகள் தெரிவித்தனர்.
The post கேரள வியாபாரிகள் வருகை அதிகரிப்பால் பொள்ளாச்சி சந்தையில் ரூ.2 கோடிக்கு மாடுகள் விற்பனை appeared first on Dinakaran.