×
Saravana Stores

நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டெல்லி: நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் மற்றும் எடிட்டர் பிரபீர் புரகாயஸ்தாவை கைதுசெய்தது சட்டவிரோதம் என்று உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. சீனாவுக்கு ஆதரவான செய்தி வெளியிட நிதி பெற்றதாக நியூஸ் கிளிக் இணையதள செய்தி நிறுவனம் மற்றும் அதன் பத்திரிகையாளர் வீடு மற்றும் அலுவலகங்களில் டெல்லி சிறப்பு பிரிவு போலீசார் சோதனை நடத்தினர். கடந்த ஆண்டு அக்டோபர் 3-ம் தேதி உபா சட்டத்தின்கீழ் பிரபீர் புரகாயஸ்தா கைது செய்யப்பட்டார்.

நியூஸ் கிளிக் மனிதவள பிரிவு தலைமை அதிகாரி அமித் சக்கரவர்த்தியும் கைது செய்யப்பட்டிருந்தார். ஆன்லைன் பத்திரிகை நிறுவனத்தின் ஆசிரியர் கைதுசெய்யப்பட்டதற்கு நாடு முழுவதும் கண்டனம் எழுந்தது. இதனிடையே தமது கைது நடவடிக்கைக்கு எதிராக பிர்புர் புர்க்யஸ்தா உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், பிர்புர் புர்க்யஸ்தாவை ஊபா சட்டத்தின் கீழ் கைது செய்தது சட்டவிரோதம் என்றும் பிரபீர் புரகாயஸ்தாவை உடனடியாக விடுதலை செய்யவும் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

The post நியூஸ் கிளிக் இணையதள நிறுவனர் கைது சட்டவிரோதம்: உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு appeared first on Dinakaran.

Tags : News Click ,Supreme Court ,Delhi ,News Cliq ,Prabir Buraghaista ,PRO-CHINA NEWS ,Dinakaran ,
× RELATED நீதிதேவதை சிலையில் மாற்றம் செய்ய...