நாகப்பட்டினம்,மே15: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் என் கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. இதில் பேசிய கலெக்டர் (பொ) பேபி, எதிர்கால இலக்கை மாணவ பருவ காலத்திலேயே திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் (பொ) சுகுமார் வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர்(பொ) புகழேந்தி, மாவட்ட கல்வி அலுவலர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர்(பொ) பேபி தலைமை வகித்து பேசியதாவது: படிப்பதை நன்றாக படிக்க வேண்டும்.
ஆனால் பிளஸ் 2 தேர்விற்கு பின்னர் எதை படிக்க வேண்டும். எங்கு படிக்க வேண்டும் என நிறைய மாணவர்களுக்கு குழப்பம் இருக்கும். இந்த குழப்பதை போக்கவே கல்லூரி கனவு என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.
நாங்கள் படிக்கும் போது இது போன்ற விழிப்புணர்வு ஏதும் இல்லை. நான் வசித்த கிராமத்தில் பஸ் வசதி இல்லை. அப்படிபட்ட கிராமத்தில் நான் படித்து எனது கிராமத்தில் முதன் முதலாக வந்த பட்டதாரி பெண். முதன் முதலாக குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்ற பெண். இதை உங்களிடம் நான் சொல்வதற்கு காரணம் போதிய விழிப்புணர்வு இல்லாத காலத்தில் இந்த அளவிற்கு உயர காரணம் எனது லட்சியம். அதே போல் நீங்களும் லட்சியத்துடன் படிக்க வேண்டும். பிளஸ் டூ முடித்த பின்னர் நிறைய பேருக்கு புரிதல் இருக்காது. புரிதல் பெற வேண்டும் என்பதற்காகவே இந்த விழிப்புணர்வு நடத்தப்படுகிறது.
வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தும் போது அதை கவனிக்காமல் இருப்பது போல் இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கவனம் இல்லாமல் இருக்க கூடாது. மாணவ பருவ காலம் நல்ல பொற்காலம். இந்த காலத்தை இழந்துவிடக்கூடாது. எதிர்கால இலக்கை இந்த மாணவ பருவ காலத்திலேயே திட்டமிட வேண்டும். அவ்வாறு திட்டமிட்டு சென்றால் தான் மாபெரும் வெற்றியை பெற முடியும் என்றார். மயிலாடுதுறை,மே 15: மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தில் 1,97,798 நபர்கள் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்கள் தமிழக முதல்வருக்கு நன்றியை தெரிவித்துள்ளனர்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை மக்களுக்கு வீடு தேடி சென்று சிகிச்சை அளிக்கும் வகையில் மக்களை தேடி மருத்துவ திட்டத்தை செயல்படுத்த உத்தரவிட்டார். தற்போது நான்காம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சியில் நிறைவேற்றப்பட்டு உள்ள எண்ணற்ற திட்டங்களில் முதன்மையான திட்டம்தான் மக்களைத் தேடி மருத்துவம் திட்டம் ஆகும். இந்தியாவிலேயே வேறு எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் மக்களின் இல்லம் தேடிச் சென்று இலவச மருத்துவ சிகிச்சை மற்றும் மருந்து மாத்திரைகள் வழங்கும் இத்திட்டத்தினால் தமிழ்நாட்டில் 1.70 கோடி நபர்கள் பயனடைந்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டத்தில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின் வாயிலாக 93,677 நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம், 48,709 நபர்களுக்கு நீரிழிவு மற்றும் 43,222 நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோய்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை அளித்து பயனடைந்துள்ளார்கள். மேலும், 40,52 நபர்களுக்கு வலி தணிப்பு சிகிச்சை மற்றும் 7,595 நபர்களுக்கு உடற்பயிற்சி சிகிச்சை வழங்கப்பட்டு பயனடைந்துள்ளனர்.
மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் மயிலாடுதுறை வட்டம் பால்பண்ணை பகுதியில் வசித்து வரும் பானுமதி தெரிவித்ததாவது:
என் பெயர் பானுமதி. எனக்கு 72 வயதாகிறது. நான் மயிலாடுதுறை பால்பண்ணை பகுதியில் வசித்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகளாக எனக்கு சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக மயிலாடுதுறை அரசு பெரியார் தலைமைமருத்துவமனைக்கு சென்று வரிசையில் காத்திருந்து சிகிச்சைக்கான மாத மாத்திரைகள் வாங்கி வந்தேன்.இதனால் எனக்கு வயதான நிலையில் மிகவும் சிரமமாக இருந்தது. இந்நிலையில் மக்களை தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம்அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் வழியாக வீடு தேடி எனது நோய்க்கான பரிசோதனையும் செய்து இரண்டு மாதத்திற்கான மாத்திரைகளும் வழங்குகின்றனர்.
இதனால் நான் வீட்டிலிருந்தபடியே சிகிச்சை பெற்று குணமாகி வருகிறேன். இச்சிறப்பான திட்டத்தை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சர் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
The post மாணவ பருவத்திலேயே திட்டமிட வேண்டும் appeared first on Dinakaran.