×

உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளி 10ம் வகுப்பில் 100% தேர்ச்சிக்கு பென்சனர் கூட்டமைப்பு பாராட்டு

ஜெயங்கொண்டம், மே15: உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதற்கு மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டி அகிலபாரத மூத்தகுடி மக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட்து.

அகிலபாரத மூத்தகுடி மக்கள் மற்றும் பென்சனர்கள் கூட்டமைப்பின் உடையார்பாளையம் நகரக் கிளையின் சார்பில் மாதந்திரக்கூட்டம் உடையார்பாளையம் தனியார் திருமண மண்டபம் வளாக அலுவலக கட்டிடத்தில் நடைபெற்றது. கிளைத் தலைவர் பழனிவேலு தலைமை வகித்தார். நிர்வாகிகள் ராஜேந்திரன், தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பெரியசாமி வரவேற்றார். தலைவர் பேசுகையில், புதிய உறுப்பினர்கள் சேர்க்க வேண்டும்.

சங்க முன்னேற்றத்திற்காக பல வகையிலும் உதவி செய்ய வேண்டும் என்றார்.தங்கராசு பேசுகையில் மாணவர்கள் கல்வித்திறன் வளர்ச்சியை பெருக்கவும் அதற்கான முயற்ச்சியாக அதிகாலைப் படித்தல், எழுதிப்பழகுதல் மற்றும் மனப்பாடம் செய்துப் பழகுதல் ஆகியவற்றை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.
பென்சனர்கள் தங்கள் வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு மேற்படி பயிற்சியை கடைப்பிடிக்க குழந்தைகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்றார். முடிவில் ராஜேந்திரன் நன்றி கூறினார்.கூட்டத்தில் உடையார்பாளையம் அரசு பெண்கள் மேல் நிலைப்பள்ளியில் 10ம் வகுப்பில் நூற்றுக்கு நூறு வெற்றி பெற்றதற்க்கு மாணவிகளையும் ஆசிரியர்களையும் பாராட்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

The post உடையார்பாளையம் அரசு பெண்கள் பள்ளி 10ம் வகுப்பில் 100% தேர்ச்சிக்கு பென்சனர் கூட்டமைப்பு பாராட்டு appeared first on Dinakaran.

Tags : Bensoner Federation ,Udayarpalayam Government Girls School ,Jayangkondam ,Akilabharata Senior Citizens and Pensioners Federation of Udayarpalayam Government Girls Higher Secondary School ,Akhil Bharat Senior Citizens and Pensioners Federation ,Pensioner Federation ,Class ,
× RELATED பத்திர பதிவு செய்ய ரூ.1,500 லஞ்சம் ஜெயங்கொண்டம் சார் பதிவாளர் கைது