- பிதாரி அம்மன் கோயில்
- Kumbabhishekam
- திகுர்
- ஜெயங்கொண்டம்
- ஜெயங்கொண்டம்
- பிடாரி அம்மன்
- Chelliyamman
- பாலசுப்ரமணியர் கோவில்
- அனுக்னை
- விக்னேஸ்வர பூஜை
- வாஸ்து சாந்தி
- கணபதி ஹோமாம்
- நவக்கிரக ஹோமம்
- பூர்ணாகுடி பிரவேச பலி
- பிடாரி அம்மன் கோவில்
ஜெயங்கொண்டம்,மே15: ஜெயங்கொண்டம் அருகே உள்ள கொடுக்கூர் கிராமத்தில் விநாயகர், பிடாரி அம்மன் என்கிற செல்லியம்மன், பாலசுப்பிரமணியர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை ,வாஸ்து சாந்தி, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், பூர்ணாகுதி பிரவேச பலி, அங்குரார் பணம், ரக்ஷா பந்தனம், யந்திர ஸ்தாபனம், ஆகியவை நடைபெற்றது. நேற்று முன் தினம் காலை மூன்றாம் கால யாக பூஜை, புண்ணியாக வசனம், வேத பாராயணம், சுவாமிகளுக்கு நாடி சந்தானம், தீபாராதனை, யாத்திரா தானம், ஆகியவை நடைபெற்றது. பின்னர் காலை சுமார் 10 மணி அளவில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேகத்தை காண சுற்று வட்ட கிராமங்களில் இருந்து இடையக்குறிச்சி, குவாகம், திருத்துளார், பொன் பரப்பி, தாமரைப்பூண்டி, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் இருந்து வந்திருந்த மக்கள் கும்பாபிஷேகத்தை தரிசனம் செய்து சுவாமியை வழிபட்டு சென்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள், விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.
The post ஜெயங்கொண்டம் அருகே கொடுக்கூரில் பிடாரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் appeared first on Dinakaran.