- புதுக்கோட்டை மாவட்டம்
- புதுக்கோட்டை
- சட்ட சேவைகள் கமிஷன்
- புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம்
- வட்ட சட்ட சேவைகள் குழு
- அறந்தாங்கி
- ஆலங்குடி
- ஆவுதயர்கோவிலில்
- கந்தர்வகோட்டை
- Ilupur
புதுக்கோட்டை,மே15: புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என சட்டப்பணிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம் மற்றும் வட்ட சட்ட பணிகள் குழு, அறந்தாங்கி, ஆலங்குடி, ஆவுடையார்கோவில், கந்தர்வகோட்டை, இலுப்பூர், கறம்பக்குடி, கீரனூர், மணமேல்குடி, பொன்னமராவதி, திருமயம், விராலிமலை ஆகிய அலுவலகங்களில் சட்ட தன்னார்வலராக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தை சார்ந்த கீழ் குறிப்பிடப்பட்டுள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
ஆசிரியர்கள் மற்றும் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் மற்றும் மூத்த குடிமக்கள், பயிலும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மருத்துவர்கள், மாணவர்கள் மற்றும் சட்டக்கல்லூரி மாணவர்கள் (வழக்கறிஞராக பதிவு செய்யும் வரை). அரசியல் அமைப்பு சாராத, பொதுச்சேவை புரியும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த உறுப்பனர்கள், மகளிர் சுயஉதவிகுழுக்கள் மற்றும் ஓடுக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட பெண்களுக்காக பணிபுரியும் தொண்டு நிறுவனங்களை சார்ந்த உறுப்பினர்கள், நீண்ட கால தண்டணை பெற்று சிறையில் இருந்துவரும், நன்நடத்தை கொண்ட, கல்வி பயின்ற சிறைவாசிகள் விண்ணப்ப படிவம் மற்றும் முழு விபரம் https://districts.ecourts.gov.in/pudukkottai என்ற இணையதளத்தில் விருப்பமுள்ள தகுதிவாய்ந்த நபர்கள் மேற்படி இணையதள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, அதனை முறையாக பூர்த்தி செய்து வரும் 27ம்தேதி மாலை 5 மணிக்குள் “தலைவர், முதன்மை மாவட்ட நீதிபதி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணையம், புதுக்கோட்டை” என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு இதன் மூலம் கோரப்படுகிறது.
இறுதி நாளுக்கு பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. தகுதியான விண்ணப்பங்களின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட விண்ணப்பதாரர்கள் வரும் 29ம் தேதி காலை 10 மணிக்கு புதுக்கோட்டை மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்குள் இருக்கும் சமரச தீர்வு மைய அலுவலகத்தில் நேர்முகத்தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இப்பணிக்கு சம்பளம், தொகுப்பூதியம் மற்றும் தினக்கூலி ஏதும் வழங்கப்படாது, சேவை மனப்பான்மை உள்ளவராக இருத்தல் வேண்டும், சேவைக்கேற்ற மதிப்பூதியம் வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post புதுக்கோட்டை மாவட்டத்தில் சட்ட தன்னார்வலர்கள் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு appeared first on Dinakaran.