தஞ்சாவூர், மே 15:தஞ்சாவூர் அருகே ஸ்வீட் கடையின் பூட்டை உடைத்து எல்இடி டிவி மற்றும் ₹25,000 ரொக்கத்தை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து தஞ்சாவூர் கிழக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் கீழவாசல் குறிஞ்சி நகர் பகுதியை சேர்ந்த சுப்பையா மகன் சரவணன். (60). இவர் கரந்தை சுங்கச்சாவடி பைபாஸ் சாலையில் பழைய இரும்புக் கடை நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு இவர் கடையை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்பு நேற்று வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ₹10 ஆயிரம் மதிப்பிலான எல்இடி டிவி மற்றும் கல்லாப்பெட்டியில் இருந்த ₹25 ஆயிரம் பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிய வந்தது. இதையடுத்து அதிர்ச்சி அடைந்த சரவணன் தஞ்சாவூர் கீழவாசலில் உள்ள கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் திருநாவுக்கரசு வழக்கு பதிவு செய்து திருடிச் சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
முதலமைச்சர் செயல்படுத்தியுள்ள பெண்களுக்கான இலவச பேருந்துப் பயணத் திட்டத்தின்கீழ் நானும் பயனடைந்து வருகிறேன். இதன் மூலம் சேமிக்கப்படும் பணத்தினை எனது குடும்ப செலவிற்கு பயன்படுத்திக் கொள்கிறேன். பெண்களை முன்னேற்றக் கூடிய வகையில் இச்சிறப்பு மிக்க திட்டத்தினை செயல்படுத்திய தமிழ்நாடு முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
The post தஞ்சாவூரில் பழைய இரும்புக் கடையின் பூட்டை உடைத்து டிவி ₹25 ஆயிரம் கொள்ளை appeared first on Dinakaran.